வரலாறு முக்கியம் அமைச்சரே
தமிழகத்தில் ஒரு பெண் 6 முறை முதலமைச்சராக தேர்வாகியுள்ளார்.
இதுபோல் கணிசமான அளவில் பெண்கள் அரசியலில் ஜொலிக்க
வேண்டும் என்பதே எதிர்பார்ப்பு.
அதனை நடைமுறைக்கு கொண்டு வர ஒரே வழி பெண்களுக்கான 33% சதவீத இடஒதுக்கீடு தான். அது
மக்களவையில் கிடப்பில் போடப்பட்ட ஒரு மசோதாவாக தான் உள்ளது.
தமிழகத்தில் கடைசியாக நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கான
இடஒதுக்கீடு அமலில் இருந்தது. அதன் காரணமாகத்தான் 51,810 பெண்கள் போட்டியிட்டனர்.
அதே நிலை சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தலிலும் அமல்படுத்தபட வேண்டும் என்ற
கோரிக்கையும் எழுகிறது. ஒருவேளை அந்த மசோதா முற்றிலுமாக நிராகரிக்கப்பட்டால்,
அரசியலில் பெண்களின் நிலை கவலைக்கிடம் தான்.
17 மக்களவை தேர்தல் நிறைவு பெற்றுள்ளது. கடந்த 16 தேர்தலிலும்
அதாவது 1952 முதல் 2014 வரை நடைபெற்ற மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று மக்களவைக்கு
சென்ற பெண்களின் எண்ணிகை மிகவும் குறைவாக இருக்கிறது. 40 தொகுதிகளை கொண்ட
தமிழகத்தில் ஒவ்வொரு தேர்தலிலும் இதுவரை 5 தொகுதிகளில் கூட பெண்கள் வென்றதில்லை. இந்தியாவில் இதுவரை 16 மக்களவை தேர்தல்கள் நடைபெற்றுள்ளன. இதில் பெண்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைவாகவே உள்ளது. இதுவரை தமிழகத்தில் இருந்து வெற்றி பெற்ற பெண் வேட்பாளர்களின் எண்ணிக்கை குறித்து பார்ப்போம்
தேர்தல்
ஆண்டு தமிழக உறுப்பினர்கள் மொத்த பெண்கள்
1951 2 24
1957 1 24
1962 2 37
1967 _ 33
1971 2 28
1977 2
21
1980 - 32
1984 2 45
1989 2 28
1991
3 42
1996 - 41
1998
1 44
1999 2 52
2004 4
54
2009
1 64
2014
4 66
2019
3 78
கருத்துகள்
கருத்துரையிடுக